This is BeyondWords's Typepad Profile.
Join Typepad and start following BeyondWords's activity
Join Now!
Already a member? Sign In
BeyondWords
பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.
Interests: இசை, இலக்கியம், தமிழ், மிருகங்கள்
Recent Activity
இந்த கதை எழுத காரணமாக இருந்தவர் மேஜர் நந்து ஜயால். டெஹ்ரடூனில் உள்ள இந்திய மலையேறிகளின் பள்ளிக்குத் தலைச்சன் பிள்ளை. அவரது மலையேறும் அனுபவங்களை 2010ஆம் ஆண்டு படித்தேன். துரதிர்ஷ்டமாக இள வயதிலேயே இறந்துவிட்டாலும், இன்றும் அப்பள்ளியிலிருந்து வெளியேறி பல மலை உச்சிகளை அடையும் வீரர்கள் மேஜர் நந்து ஜயாலை மறப்பதில்லை என்பதை பலரது அனுபவங்களைத் தொகுத்தளித்த Indian Mountaineering School, Dehradun எனும் புத்தகத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. ** நன்றி : சொல்வனம். http://solvanam.com/?p=25545 Continue reading
Image
பென்னட் தன்னிடமிருந்த ஷூமன் நாட்குறிப்புகளைப் பிரித்துப் பார்த்தார். கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக தனது வாழ்வை நாட்குறிப்புகளில் சேர்ந்து வைத்திருக்கும் ஒரு கலைஞன் என அவருக்குத் தோன்றியது. கிளாராவுடன் இணைந்த பிறகு எழுதப்பட்ட நாட்குறிப்பும் ஷூமன்னின் சிறுவயதில் எழுதப்பட்டது மிக விரிவாக இருந்தன. 'பாரிசின் ஆபரா அரங்கத்தின் முதன்மை வயலின் கலைஞர் ஸ்மித் எங்களைப் பார்க்க வந்திருந்தார். பெர்லின் பில்ஹார்மானிக் குழுவினர் நடத்தும் மென்டல்சன் மாஸ்டர் கிளாசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நபர்களில் ஒருவர். தன்னுடைய வாத்தியத் திறமை முழுவதையும் பெருமிதத்துடன் கிளாராவிடம் இசைத்துக் காட்டினார். கிளாராவை விட குறிப்பிடத்தக்க மேதை என அவனுக்கு நினைப்பு..அடேயப்பா எவ்வளவு திமிர்?' காற்றில் ஆடிய மெழுகுச் சுடர் பென்னட்டின் வாசிப்புக்குத் தடையானது. இன்னும் ஐம்பது பக்கங்களே இருந்தன என்றபோதும் பிளாக்பாரஸ்ட் கடிகாரக்குயில்கள் காலை மணி ரெண்டு என அறிவித்துவிட்டன. ஷூமன் நாட்குறிப்புகளைப் படித்து முடிக்கும்வரை செய்யும்படியான வேலை என எதுவும் பென்னட்டுக்கு இல்லை. புதிதாக ஏதேனும் அழைப்பு... Continue reading
Image
ஷூமன்னின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. குறுக்கு நெடுக்காக விழுந்து கிடக்கும் மர உத்திரம் போல மனம் முழுவதும் ஒருமுனைப்பில்லாத குறிக்கீடுகள். தொழுவத்தில் கதகதப்புக்காகக் காத்திருக்கும் ஆடு போல ஏதோ ஒன்றின் வருகைக்காக காத்திருந்தார். இதற்கு முன் எதுவுமே நினைவில்லாதது போல மனம் அரற்றியபடி இருந்தது. மறுநாள் நினைத்துப் பார்க்கும்போது கடந்து போன இந்த இரவை மறப்பது கடினம். மளுக்கென சாயும் வெட்டப்பட்ட மரம் போல திடீரென ஒரு முறிவு. ஒரே ஒரு ஓசை. அதன் அங்க லாவண்யங்களை மனதுக்குள் ஒட்டிப் பார்த்தபடி இன்றிரவு கழிந்துவிடும் போல ஷூமன்னுக்குத் தோன்றியது. கசிந்துகொண்டிருந்த சிறு ஒளிக்கீற்றில் பற்பல நிற தூசிகள் மிதந்தன. தங்களது இருப்பின் மூலாதாரமே இந்த வெளிச்சக்கீற்றுகள் தான் என உணர்ந்ததால் பதற்றத்துடன் மினுங்கின. எத்தனை நேரம் இதையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பது என ஷூமன் யோசித்தார். கலைமனம் கூட செயலில் தான் வெளிப்படும் என்றாலும் ஒவ்வொரு கவிதை வரிக்கும் சேர்க்கும் இசை தன்னை... Continue reading
Image
காலை பத்துமணிக்கும் புலராத செப்டம்பர் மாதம். சாலை வரை நீண்டிருந்த பென்னட்டுடைய வீட்டின் புல்வெளி எங்கும் இரவு பனிப்பொழிந்ததற்கான அடையாளங்கள் மிச்சம் இருந்தன. திறந்திருந்த வரவேற்பறை ஜன்னல் சுவரில் பதிந்திருந்த கன அடுப்பின் முயற்சியைத் தோற்கடித்தது. வரவேற்பறை மூலையில் உட்கார்ந்திருந்த கிளாராவின் கண்கள் தூக்கத்தை இழந்திருந்தன. ரெண்டு நாட்கள் மூன்று இரவுகள் பயணம் செய்து இங்கிலாந்து யார்க் நகரில் பென்னட் வீட்டுக்கு வந்திருந்தாள். மரப்படிகேட்டுகள் உராயும் ஓசை கேட்க பென்னட் வந்துவிட்டாரென எட்டிப்பார்த்தாள். வேலையாள். பலகைச் சட்டகங்கள் போல, தேவையான அசைவுகளை மட்டுமே உடைய அவளது நகர்வு அதிசயமாக இருந்தது. கிளாராவுக்கருகே இருந்த மேஜையில் சிறு கிண்ணங்களில் இனிப்பு வகைகளை வைத்துவிட்டு அசைவே தெரியாதது போல மறைந்தாள். வெள்ளை மெழுகுவர்த்தி போலிருந்தாள். கதப்பூட்டும் நெருப்பில் அவ்வப்போது வெடித்த மரச் சுள்ளிகளை தவிர உயிர்ப்பே இல்லாத உறைந்தவிட்ட அறை. டிரெஸ்டன் நகரை விட்டு சொல்லிக்கொள்ளாமல் விடைபெற்றார் பென்னட் எனக் கேள்விபட்டதும் கடும் கோபம்... Continue reading
Image
எல்ப் நதியின் மேற்கு கரை காடு அடர்த்திக்குப் பிரசித்தம். மழைக்காடு போல தொட்ட இடமெல்லாம் ஈரம். தன்னை ஏன் ஐசக் இங்கு கூட்டி வந்தார் என ஷூமன்னுக்குப் புரியவில்லை. எமிலியின் சரீர உபாதைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் இருள் கவியும் நாட்கள் அலைக்கழிப்பதாக ஷூமன் விரக்தியில் இருந்தார். கைவிரல்கள் வீக்கம் கண்டிருந்தன. முழு காட்சி மனக்கண்ணில் விரிந்து அவற்றின் வரைகள் அரைகுறையாக மிஞ்சிப்போனவையாக இசைக்குறிப்புகளில் தங்கிவிடும். சில சமயம், இசையை முழுகிவிட்டு அம்மா சொல்வது போல வக்கீலுக்குப் படிக்கப் போகலாமெனத் தோன்றும். வழக்கம்போல வீட்டருகே இருந்த சிறு மணல்மேட்டில் மனம் வெதும்பி உட்கார்ந்திருந்த நேரத்தில் ஐசக் பரிச்சியமானார். செயிண்ட் அகஸ்டியன் தேவாலயத்தில் ஆர்கன் வாசிக்கும் ஐசக்கின் இசையை ஞாயிறு தோறும் ஷூமன் கேட்டு வந்தார். விபரமறிந்து கேட்ட முதல் இசையே அதுதான். ஓக் மரங்களுக்குப் பின் ஒளிந்து விடக்கூடிய தேகம். அரவணைக்கக்கூடிய மாலை சூரியனின் பார்வை. பேசப் பேச அவரது கண்களில் இருந்த... Continue reading
Image
ராபர்ட் ஷூமன் கண்மூடி உட்கார்ந்திருந்தான். மாலை நேர செந்நிற வெயில் வனத்தின் இடைவெளி வழியாக விடாமல் நுழைந்தது. தூரத்தில் மரங்கொத்தி பறவையின் ர்டீட் ர்டீட் ஒலி கேட்டது. சுழல்கள் மண்டிய நதிக்கு முன்னால் பத்து வயது ஷூமன் உட்கார்ந்திருந்தான். ஒன்றிரண்டு தங்க நிற முடிக்கற்றைகள் அவனது மேல் உதடுவரை வழிந்திருந்தது. மோனமான புன்னகை அரும்பிய முகத்தில் காற்றின் அசைவுக்கேற்ப வெயில் நிழலாடிக்கொண்டிருந்தது. சட்டென அவனருகே இருந்த மரக்கிளையிலிருந்து பறவைகள் கூட்டாக சிதறிப் பறந்தன. வெளிச்சத்திற்குப் பழக சிரமப்பட்டன கண்கள். ஆற்றின் மறுகரையில் துலாம்பரமாக ஒரு உருவம் கையசைத்துக் கூப்பிட்டது. பச்சையும் சாம்பலும் கலந்த அவ்வுருவத்தின் சமையலறை உடுப்புத் தெளிவானது. அவனது அம்மா சத்தமாகக் கத்திக்கொண்டு கையசைப்பது தெரிந்தது. 'எமிலி இறந்துவிட்டாள். ஆற்றோடு போய்விட்டாள். சீக்கிரம் வந்துத் தொலை..' எங்கிருக்கிறோம் எனப் புரியாமல் சட்டென எழுந்துவிட்டான். கனமான மரப்பாலத்தை வேகமாகத் தாண்டி தனது வீட்டை நோக்கி விரைந்தான். முன்செல்ல எத்தனிக்கும் குதிரை போல... Continue reading
Image
முதல் ஆபரா. கனத்த திரைசீலைகளுக்குப் பின்னால் உலகம் உருபெறவில்லை. கனப்பு அறை போல டிரேஸ்டன் நகரின் மேன்மை பொருந்திய கனவான்கள் சுற்றிலும் புகைபிடித்துக் கொண்டிருந்தனர். பலத்த சிரிப்பொலிகளும் போலியான முக பாவனைகளும் கிளாராவுக்குப் புதிது. ஆங்காங்கே தெரிந்த குழந்தைகளின் கண்களைப் பார்த்து எதையோ தேடினாள். இறுக்கமான முகத்தை விட தந்தையின் இறுக்கமான பிடி அவளை உட்கார வைத்திருந்தது. ஆபராவின் மேன்மை பற்றிய கதைகள் ஒரு மாதமாகவே வீட்டில் ஆரம்பித்திருந்தன. டிரேஸ்டன் நகருக்கு வரும் முதல் மொட்சார்ட் ஆபரா. விலகிய திரைக்குப் பின்னால் கதறல்களுடன் பாடிய கிழவியை காலத்துக்கும் கிளாரா மறக்கப்போவதில்லை. அவளது மகள் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டானாம். உன் சுற்றுவட்டாரத்தில் இருந்தால் ஒரு காளையோடு கூட நான் ஓடத் தயாராக இருந்திருப்பேன் கிழவியே என கிளாரா நினைத்து களுக்கென சிரித்தாள். கையில் பிடி இறுகியதில் அடுத்த இரு நாட்கள் பெர்ரி கொடி போல பச்சை நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. அதற்குப் பிறகு... Continue reading
Image
பளிங்குத் தரை பாவித்த அந்த விசாலமான அறைக்குள் நுழைந்தபின்னாலும் உங்களால் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிடமுடியாது. நடனப் பயிற்சிக்காக மரப்பலகைகளால் பதியப்பட்ட அறை பியாநோக்கூடமாக அவளது அப்பா மாற்றியிருந்தார். மிக உயரமான தேக்கு மரக்கதவுகள், ஜன்னல் சீலைகள். ஒரு பெரிய அரசவைக்கு அரங்கத்துக்கு உண்டான அலங்கார வேலைப்பாடுகள். பாரீஸ் கபேக்களின் அண்மைக்கால பேசுபொருளாக இருக்கும் அனைத்து வகை பியானோக்களும் அங்கு இருந்தன. அறையின் மூலையில் இருந்த ஒக் மரத்தாலான பியானோவை வாசித்துக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி. உங்கள் காதுகளுக்கு கனத்த பியானோ தந்திகள் அதிர்வு இனிமையாகத் தோன்றலாம். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த அவளது தந்தை பிரெட்ரிக் தூங்குவது போல கண்ணைக் மூடிக்கொண்டிருந்தார். அவரது கைவிரல்கள் தன்னிச்சையாக தூரிகையாக மாறி காற்றில் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. அச்சிறுமியின் முகத்தில் லயிப்பு சிறிதளவு கூட இல்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல அவளது மெல்லிய விரல்கள் ஸ்டைன்வே பியானோவின் விசைகளை பாலே நடனக்காரியின் கால்களைப் போல் தாவித்தாவி... Continue reading
Image
அன்புள்ள கிளாரா, இருபது பக்கங்கள் கிறுக்கிய கடிதத்திலிருந்து சொற்களைப் பொறுக்கி எடுத்து இந்த கடிதத்தை உனக்கு அனுப்புகிறேன். என்னை மீண்டும் உமிழ்ந்த எல்ப் நதியை சபித்தபடி ஒவ்வொரு நாளின் கொடிய விடியலை எதிர்பார்த்து நிற்கிறேன். எங்கோ ஒரு நினைவறையை தாங்கி நிற்கும் வலைகளை பிய்த்து எறிவது போல அவனது உருவத்தை அழிக்க முற்படுகிறேன். முன்னர் நாம் ஆஸ்த்ரிய பனிப்பாறை வெடிப்புகளைக் காணச் சென்றது வியாகூலமாக நினைவுக்கு வருகிறது. மீண்டும் மீண்டும். உறைந்து துண்டாகிவிடும் என நான் சொல்வதையும் கேளாது சிறுகுழந்தையைப் போல பனிப்பாரறைக்கு அடியில் ஓடிய நீரோசையைக் கேட்க காதைத் தரையில் அழுத்திப் படுத்துக்கிடந்தாயே. நீ புனல் நீரிடம் சொன்ன ரகசியத்தை எல்ப் நதி என்னை உமிழும் முன் பகிர்ந்துகொண்டது. நீராவி போல என்னுள்ளே மேலெழும்பி நெஞ்சு அதிர விழுந்தபடி உன்னுடைய சிமிக்ஞைகள் வெளியேற வாசலின்றி தவிக்கின்றன. காதலியின் மூச்சுக்காற்று என் இருப்பின் பதாகை போல எனப் பாடிய ஷூபர்ட்டிடம் கடன்... Continue reading
Image
தந்தியிசை கன்சர்ட்டோ வகையில் விவால்டியின் நான்கு பருவங்கள் (Four Seasons) மிகவும் பிரபலம். போன வாரம் பார்ப்பிகன் அரங்கில் மோசார்ட் சிம்பொனி குழுவினர் இசைத்த இந்த கன்சர்ட்டோவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பொனியைப் போலல்லாது சிறு தந்தியிசைக் குழுவினரின் கன்சர்ட்டோக்கள் சேம்பர் இசை வடிவில் அமைந்திருக்கும். வி.எஸ்.நரசிம்மனின் Madras String Quartet குழுவினர் சேம்பர் வகையினராக இருந்தாலும், ஒரே ஒரு வயலின் மட்டுமே இசைப்பதால் கன்சர்ட்டோ எனும் அமைப்புக்குள் அடங்காது. இப்படி பிரித்து வகைபடுத்துவது ஒரு செளகரியத்துக்காக மட்டுமே. பறவைகளை இனம் காண்பதற்காக அவற்றின் இறெக்கை வடிவம், உணவு முறை, இருப்பிடம் சார்ந்து வகைப்படுத்துவதைப் போல, ஒழுங்காகப் பிரித்து அமைத்துக்கொள்வது இசை வடிவை அடையாளம் காணப்பயன்படும். விவால்டியின் நான்கு பருவங்கள் நான்கு விதமான கன்சர்ட்டோக்கள் அடங்கியது. வசந்தகாலம், வெயில் காலம், இளவேனில் காலம், குளிர் காலம் என பருவத்தை இசையின் அடையாளமாக மாற்றியுள்ளார். பொதுவாக இயற்கையை நம்பி வாழும் விலங்கினங்களின் குணாதிசய... Continue reading
Image
கவிஞர் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 2012 வழங்கப்படுகிறது. அவரது கவிதைகள் கீழ்கண்ட தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. http://poetdevadevan.blogspot.com வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். துள்ளல் நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால் மேலும் ஒரு துள்ளலில் மரணம் மரித்த அக்கணமே பறவை. Continue reading
நண்பர் பாஸ்கர் ரொம்ப நாட்களாக ஆம்னிபஸ் தளத்தில் நடக்கும் புத்தக விமர்சன முயற்சிகள் பற்றி குறிப்பிட்டு வந்துள்ளார். தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதுவது என்பது சாதாரண காரியமல்ல. அதுவும் ஆம்னிபஸ் தளத்தில் எழுதப்படும் பலவகையான புத்தகங்களைப் பார்க்கையில் சமயத்தில் பொறாமைகூட வந்துவிடுகிறது. தினம் சமையலா என முணுமுணுப்பதைக் காட்டிலும் தினம் சாப்பிட வேண்டுமா என கேள்வி கேட்பவர் குறைவு என்பதை நமது ஹோட்டல்களில் கூடும் கூட்டத்தை வைத்தே சொல்லிவிடமுடியும். அது போலத்தான் இந்த தளத்தை நடத்தும் அன்பர்கள் யாரும் சாப்பிட முணுமுணுப்பதில்லை, சமைப்பதில் ரோட்டா போட்டு ஒவ்வொருவர் ஒரு நாள் எனப் பிரித்துக்கொண்டிருப்பதால் பெரும் பாரமாகத் தெரிவதில்லை என்றார். மிக மகிழ்ச்சியான விஷயம். இங்கிலாந்துப் பகுதியில் கூடும் பறவைகள் பற்றி முன்னர் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். How to be a bad birdwatcher எனும் புத்தகத்தைப் படித்தபின் பறவைகளைக் கவனிப்பதில் (எலெக்ட்ரிக் கம்பியைப் பார்ப்பது போல ஏனோ பறவைகளைப் பார்ப்பது... Continue reading
Image
ஒரு டயரிக்குறிப்பு - 2012 அக்டோபர் முடிய இருக்கும் மூன்று இரவுகளுக்கு முந்தைய இரவில் லண்டனில் ரிக்மேன்ஸ்வொர்த் எனும் குக்கிராமத்தில் அபிஷேக் ரகுராமின் கச்சேரியை முதல்முறையாகக் கேட்டேன். அபிஷேக் ரகுராம் (பாலக்காடு ரகுவின் பேரர்) கக்சேரிக்குப் (வயலின் - மைசூர் ஸ்ரீகாந்த், கஞ்சிரா - அனிருத் அத்ரேயா, மிருதங்கம் காரைக்குடி மணி) போய் வந்த கையோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். யூடியூபில் அவரது ஒருசில பாடல்களை மட்டுமே இருப்பதாலும், நேரடியாகக் கச்சேரியில் கேட்பது இந்தியா செல்லும்போது மட்டுமே சாத்தியம் என்பதாலும் திறமையான இளைஞனைப் பற்றி மற்றவர்கள் சொல்லிக் கேட்டதோடு சரி. நண்பர் பிரபு [சொல்வனத்தில் இவரது நல்லதொரு கதை வந்திருக்கு, படிச்சீங்களா?] அபிஷேக் ரகுராம் லண்டன் வருகிறார், அதுவும் உங்க வீட்டு ஏரியாவிலேயே (ஐந்து நிமிட நடை) கச்சேரி எனச் சொன்ன நாள் முதல் இதற்காகக் காத்திருந்தேன். இன்று கைகொடுக்காத வானிலையினால் நண்பர்களுடன் செல்ல இருந்த ஒரு நாள் பயணத்தையெல்லாம் அதிரடியாக... Continue reading
கிரேக்கத்துக்குப் போய் தமிழிசை யுடர்ன் அடித்தது என பக்கிரிசாமி பாரதி சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் மேற்கிசை, இந்திய செவ்வியல் இசை இரண்டும் பாடல் வரிகளை ஒலி வடிவமாக வெளிப்படுத்துவதில் தான் பல்லிசையாக உருவானது. சிவனடியார் ஆறுமுகசாமி, அரையராக வடிவெடுத்த ராமபாரதி என இன்றும் அது ஆரம்பகால வடிவில் இருக்கு. நான் பார்த்தது ஸ்ரீரங்கம் அரையர் கோஷ்டி தான்- அதில் ஒரு கோஷ்டி முதல் வரியைப் மேல் ஸ்ருதியில் பாட, மற்றொரு கோஷ்டி இடைபுகுந்து கீழ் ஸ்ருதியில் அடுத்த வரியைப் பாடத் தொடங்கும். இது ஒலிவடிவில் ஹார்மனியின் பாணி. ஏற்ற இறக்கங்களோடு அவர்கள் பாடும்போது தனித்தனியாக கேட்பதை விட இன்னும் அதிக இனிமையாக இருக்கும். ஆனால் இடையில் எங்கோ இந்த பாணியில் பாடுவது பெரிதளவு தொலைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இன்றும் ஓதுவார்கள், அரையர் கோஷ்டிகளில் இதன் ஆரம்பகால வடிவைக் கேட்கலாம். ஆனாலும், மக்கள் இசையில் பெரிதளவு புழங்கவில்லை. ஏன்? திட்டவட்டமாக இதுதான்... Continue reading
ஆறு மாதங்களாக ஆறப்போட்ட தளத்தை 'சற்று முன்பு' பாடல் திறக்க வைத்துவிட்டது. வேலை கிடைக்க மூன்று மாதங்கள் அலைக்கழிய, கிடைத்த வேலை ஒரு மாதமாக புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் 'நீ தானே என் பொன்வசந்தம்' படப்பாடல் வெளியீடு. ராஜா இசை வந்தவுடன் வெளியாகும் புராணங்கள் சிறிதும் ஏமாற்றாமல் வந்துவிட்டன. 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல் மாதிரி இல்லைங்க' என்பது முதல் 'ராஜாவெல்லாம் அடங்கிப் போய் மாமாங்கம் ஆச்சுங்க' என கோச் வண்டி போல வரிசையாக விமர்சனம் ஒரு பக்கம். இன்னொரு எல்லையில் ராஜா எது போட்டாலும் தேவகானம் தான் என கொக்கரித்து விசில் அடிக்கும் ரசிகர்களின் அதீதக் கொண்டாட்டம். இடைபட்ட கூட்டுரோட்டில் பாடலைக் கேட்டு ரசித்தவர்கள் கூட என்ன சொல்வது, எப்படி சொல்வது என மற்றவர்களது ரியாக்ஷனுக்காக காத்திருந்தது என வழக்கமாக ராஜா இசைக்கு வரும் சகல வரவேற்பும் 'நீ தானே என் பொன்வசந்தம்' பாடல்களுக்கு வந்துவிட்டன. வெளியான முதல் நாளிலிருந்து... Continue reading
ஜெயமோகன் 'உலகின் மிகப்பெரிய வேலி' கட்டுரையில் குறிப்பிட்டிருந்த 'The Great Hedge of India' புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். இங்கிலாந்தின் சில நூலகங்களில் இது வெறும் நோக்குநூலாக மட்டும் வைத்திருக்கும் ரகசியம் புரியவில்லை. மிக மிக சுவாரஸ்யமான புத்தகம். வெள்ளைக்காரன் வந்ததால் தான் நமக்கு ரயில் கிடைச்சது, இங்கிலீஷ் படிச்சோம், நம்ம அறிவு வளர்ந்தது என ஐரோப்பா சர்வாதிகாரத்தை விதந்தோம்பும் என் நண்பர்கள், மாமாக்கள், தாத்தாக்களுக்கு பல பிரதிகள் வாங்கிச் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன் (சீக்கிரம் தமிழில் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன், இல்லையென்றால் இதையும் வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்தது, இங்கிலீஷு படிச்சதினால தான தெரியவந்ததுன்னு கிளம்புவார்கள் :)) ஆங்கிலேய ஆட்சியின் சில புதிய பக்கங்களை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது. குறிப்பாக, உப்பு போன்ற மிகவும் அடிப்படையான உணவைக் கட்டுப்படுத்தும்போது பாதிப்படைந்த தலைமுறையின் நிலை என்னை மிகவும் வருத்தமாக்கியது. வியாதிக்கு குறைவிலாமல் லட்ச லட்சமாக மக்கள் மடிந்து போனதை... Continue reading
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன் எழுதிய முதல் பகுதி விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் முடித்துவிடும் எண்ணத்தோடு செளரிங்கி நிறைவுப் பகுதி. வெளியூர் சென்றால் இட்லி எங்கு கிடைக்கும், மிளகாய்பொடி கிடைத்ததா என என் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் நண்பர் இப்படி தொடர் விமர்சனம் எழுதுவதனால் மிகவும் கடுப்பாய் இருக்கிறார் எனக் கேள்வி. நமக்கு எதற்கு வம்பு? முடிக்கும்போது முடித்துவிட்டு சுபம் போட்டுவிட வேண்டியதுதான். முதல் பகுதியில், 'செளரிங்கி நாவலில் சிக்கல் இல்லாமல் இல்லை' என இந்த பெரிய நாவலின் விமர்சனத்தை ஏதோ அம்பு குத்திட்டு தொடரும் போட்ட யவனராணிக் கதைப் போல நிறுத்தியிருந்தேன். என்ன சிக்கல் எனும் டென்ஷன் எனக்கே தாங்காததால் மேலும் காக்க வைக்காமல் அம்பில் செருகியிருந்த இலச்சியின் சாயம் மறைவதற்குள் ஓலையைப் பிரித்துவிடுகிறேன். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சியின் இரண்டாம் தலைநகரத்தினுடைய இதயத்துடிப்பை பல நிகழ்வுகள் பாதித்திருக்கின்றன. ஆனால், பின்காலனிய கல்கத்தாவின் கதையான இந்த நாவலில் பிரிவினை... Continue reading
கடந்த சொல்வனம் இதழில் வெளியான ‘வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்’ எனும் விவரணப்படத்தின் அறிமுகம் இங்கே. ஐரோப்பிய சாஸ்த்ரிய இசையின் மிக முக்கியமானத் திருப்புமுனை வாக்னர் முதல் தொடங்கியது எனலாம். வாக்னரைப் பற்றித் தெரிந்துகொள்வது இசையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சி மட்டும் அல்ல. அது ஐரோப்பிய வரலாற்றின் முக்கியமான போக்கையும் தெரிந்துகொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான அலகும் கூட. இத்தனைக்கும் இஸ்ரேலில் இவரது இசை தடை செய்யப்பட்டுள்ளது. பல யூத குடும்பங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் கூட மானசீகமாக அவரது இசையை கேட்காமலேயே வெறுக்கத் தலைப்படுகின்றனர். ஆனாலும் மேற்கத்திய இசையில் மட்டுமல்லாது, ஜெர்மன் நாட்டு தேசியவாத எழுத்தின் முன்னோடி, இசை நாடகத்தின் சகல பரிணாமங்களையும் வெளிக்கொணர்ந்த மேதை, ஹிட்லரின் முதன்மையான குரு என வாக்னரின் ஆளுமை சிதறிக்கிடக்கின்றது. இத்தனை முரண்பட்ட ஆளுமையான இவரைப் பற்றி பல ஆவணப்படங்கள் உள்ளன. அதில் பிபிஸி குழுவினர் உருவாக்கிய ‘Great Dates’ மிக முக்கியமானது.... Continue reading
புகைப் பிடிப்பதை நிறுத்தி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்வோம் துறவோம் மறவோம் என இருந்தாலும் அவ்வப்போது நிறுத்தியிருக்கிறேன். முழு முற்றாக நிறுத்தி அப்பழக்கத்தை துறந்தது என்றால் கடந்த மூன்றாண்டுகளாகத்தான். இந்தப்பழக்கத்தை நிறுத்துவதால் வரும் விளைவுகளைத் தொகுக்கும் எண்ணத்தோடு, கீழுள்ள பதிவை அவ்வப்போது எழுதி வந்தேன். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. * சிகரெட் பற்றவைத்தபின் ஊதி அணைக்கும் தீக்குச்சிப் புகை கண்ணில் புகுந்து கலக்கமுறச் செய்யாத புகைவாசிகளே இருக்க முடியாது. கடைசி சிகரெட் வரை இந்தப் பிரச்சனை எனக்கு இருந்தது. உரசிப் பற்ற வைத்தவுடன் கண்களை மூடியபடி குச்சியை அணைத்துவிடவேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைப்பேன். இன்று அணைத்த கடைசி குச்சியும் கண்களைக் குளமாக்கியது. அது ஒரு எரிச்சல் தான். சுகமான எரிச்சல். முதல் இழுவைக்காக எதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது! கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடப் பழக்கம். பழக்கத்தை விடும்போதாவது கற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தப் பழக்கத்தை எதற்கு... Continue reading
என் மகள் ஆதிராவுக்கு இரண்டரை வயதாகிறது. அவள் பார்ப்பதற்காக சில குழந்தைத் தமிழ்ப் பாடல் குறுந்தகடுகளை கடந்த இரண்டு வருடங்களாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். பல வண்ணங்களில் விதவிதமான அனிமேஷன் யுத்திகளுடன் ஆங்கிலத்தில் பல காணொளிகள் இருக்கின்றன. ஆனால் எத்தனை காலத்துக்குத்தான் டிவிங்கிள் டிவிங்கிள், ஜாக் அண்ட் ஜில் பார்ப்பது? தமிழில் வரும் குழந்தைப் பாடல் தொகுப்புகளின் அனிமேஷன் நன்றாக இருக்காது, இருந்தாலும் தமிழ் பாடல்களை ஏன் கேட்க வேண்டும் என்பதே என் நண்பர்கள் பலரின் வாதமாக இருந்தது. மேற்படியாளர்களுக்கு பெரிய விளக்கங்கள் அளிக்காமல் தொடர்ந்து பல பாடல் தொகுப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன்.மிகத் தரமான பல குறுந்தகடுகள் அகப்பட்டன. கடந்த வருடம் இந்தியா சென்றிருந்த போது அபிராமி ரெகார்டிங் கம்பெனி தயாரித்துள்ள செல்லமே செல்லம் தொடர் பாடல்களையும், மேஜிக் பாக்ஸ் எனும் விற்பனையாளர் தயாரிக்கும் குறுந்தகடுகளையும் வாங்கினேன். இப்போதெல்லாம், ஆதிரா பார்க்காவிட்டாலும் நான் தினமும் ஒரு முறையாவது பார்த்துவிடுகிறேன். மிக அழகானப் பாடல் வரிகள், உறுத்தாத... Continue reading
ஐந்தாம் நாளான இன்று லண்டன் இசை நிகழ்ச்சிக்காக யூஸ்டன் எனும் பகுதியில் இருந்த புனித மேரி மேக்தலின் தேவாலயத்துக்குச் சென்றேன். அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே நேரமாகிவிட்டது. வழியும் தெளிவாகத் தெரியாது என்றாலும் வாரன் வீதி தரையடி ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில் தான் இருக்கிறது என மேப்பில் போட்டிருந்தார்கள். அதை நம்பி நடக்கத்தொடங்கியதில், சிறு சதுக்கத்தின் மூலையில் மறைந்திருந்த தேவாலய வாசலைத் தாண்டிச் சென்றுவிட்டேன். ஆங்காங்கே வழி கேட்டபின் தேவாலயத்துக்குள் செல்வதற்குள் நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடங்கள் ஆயிருந்தன. இது மிகவும் பழைய பரோக் பாணி தேவாலயம். மர வேலைப்பாடுகள் மிகுந்த உயரமான வளைவுகள் ஆலயத்தின் உயரத்தை அதிகமாகக் காட்டியது. இன்றைய நிகழ்ச்சியில் பீத்தாவனின் பியானோ ட்ரியோவும், ஷுபர்டின் பியானோ ட்ரியோவும் இசைப்பார்கள் எனப் போட்டிருந்தது. தேவாலயத்தின் மூலையில் இருந்த சிறு மேடையில் பியானோ, வயலின் மற்றும் செல்லோ கலைஞர்கள் இசைத்துக்கொண்டிருந்தனர். கூட்டம் கம்மிதான். இருபது நபர்களுக்கும் குறைவாகவே இருந்தனர். சத்தம் போடாமல் கடைசி... Continue reading
நான்காம் நாளான இன்று நவீன பிரெஞ்சு இசையமைப்பாளரான பிரான்ஸிஸ் புலென்க் (1899-1963)அமைத்த இரு இசைப்பாடல்கள் நிகழ்த்தப்பட்டன. இது ஹால்பர்ன் பகுதியில் இருந்த புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் நடைபெற்றது. டடாயிஸத்தின் கொள்கை பரப்புத் தலைவராக இருந்த புலென்க் மிக வித்தியாசமான சாஸ்திரிய சங்கீதப் படைப்புகளை வழங்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த இவரது வாழ்க்கை அக்காலகட்டத்து ஐரோப்பா போலக் குழப்பம் நிறைந்தது. பல வகை இசங்களும் புது பாணி முயற்சிகளும் மட்டுமே கலை என நம்பிய பல எண்ணிலடங்கா மேதைகள் வாழ்ந்த காலகட்டம். அந்த அலையில் மிக முக்கியமானவர் எனக் கருதப்படுபவர் புலென்க். நான் அவரது படைப்புகளைக் கேட்டதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல தீர்மானித்தேன். நேற்று போல மனக்கணக்கு தப்பவில்லை. எப்படிப்பட்ட இசையாக இது இருக்கும் என நினைத்திருந்தேனோ அப்படியே இருந்ததில் உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சி. அடோனல் எனும் இசை வகையை அறிமுகப்படுத்திய ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோன்பெர்க் வாரிசாக புலென்க் போற்றப்படுகிறார்.... Continue reading
லண்டன் இசை நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான இன்று மதியம் மூவர் இசை. பீத்தாவன், டெபுஸி, சோபின் - மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள். ஒரே நாளில் பல அரங்கங்களில் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுவாக, என் அலுவலகத்துக்கு அருகே இருக்கும் அரங்கத்தை மட்டுமே இதுவரை தேர்ந்தெடுத்து வந்தேன். ஆனால், பல இடங்களிலும் நிகழ்ச்சி நடப்பதால் இசை நிரலை ஒரு முறை நோட்டம் விட்டபின் செல்லும் வழக்கத்தைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். பிரத்யேகமான காரணம் என எதுவுமில்லை என்றாலும், பல தேவாலையங்களில் ஒரு குறிப்பிட்ட வகை இசையை மட்டுமே வாசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டு இசை எனும் நவீன வகைகளின் ஆத்திகவாதம் ஒவ்வாதது ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக வளம் பெற்று வரும் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தை இசை விமர்சகர்கள் பலவிதங்களில் வகைப்படுத்தியுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தூய சாஸ்த்ரிய சங்கீதம், பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதம், இருபதாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ இசை... Continue reading
இன்று மதியம், லண்டன் இசை மாத நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, புனித ஆன் தேவாலையத்தில் ரசித்த இசை - செயிண்ட் சான்ஸ் அமைத்த பியானோ ட்ரியோ (E minor Op 92) பீத்தாவனுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான இசை அலங்காரங்களை அமைத்தது செயிண்ட் சான்ஸ் (Camille Saint-Saens, 1835-1921) எனும் பிரெஞ்சு இசையமைப்பாளர். மொசார்டை விட செயிண்ட் சான்ஸ் மிக அற்புதமான இசையமைப்பாளர் எனப் பல இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களுக்கான இனிய எளிமையான இசை பாணிகளை பிரயோகித்து இசையமைத்தவர் என மொசார்ட்டை சில இசை விமர்சகர்கள் குற்றம் சொல்கிறார்கள். தன்னியல்பாக இசையில் அமையக்கூடிய படைப்பியல்பை மட்டுப்படுத்தி சில சட்டகங்களுக்குள் அடைக்கப் பார்த்தவர் என்பதே அவர் மேலுள்ள குற்றச்சாட்டு. அப்படி என்ன தான் செய்தார்? ராக பிரயோகங்களையும் சாத்தியங்களையும் மிக விரிவாக வெளிப்படுத்தக் கூடியது கர்னாடக சங்கீத ஆலாபனைகள். லயக் கட்டுப்பாடில்லாமல் பாடகரின் கற்பனைக்கு ஏற்றார்போல ராகத்தின் சில விஷேசப் பிரயோகங்களை மிக... Continue reading
காண்ட்ராக்ட் முடிந்த ஒரு இடைவேளைக்குப் பிறகு புது வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். பழைய பிராஜக்டையே சரியா முடிக்கலை திரும்ப வந்து முடிச்சிட்டுப் போ எனக் கூப்பிட்டதால் அங்கேயே மறுபடியும் அடைக்கலம். போன மாதம் திடீரென காண்ட்ராக்ட் முடிந்து வேலை போனபோது, அடடா என்னடா இது புது அலுவலகத்தைச் சுற்றி பல முக்கியமான இடங்கள் இருக்கே அதையெல்லாம் பார்க்கலியே என வந்த எரிச்சலை இப்போது தவணை முறையில் சரி செய்துவருகிறேன். நான் வேலை செய்யும் செண்ட்ரல் லண்டன் அலுவலகத்தைச் சுற்றி பல கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த வாரம் முதல் நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்க்க உத்தேசம். 1. சார்லஸ் டிக்கன்ஸின் இருநூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, லண்டனின் பல இடங்களில் அவரது படைப்புகள், வாழ்க்கைப் பற்றிய கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றாவது பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என் அலுவலகம் இருக்கும் ஹால்பேர்ன் பகுதியில் தான் The... Continue reading